2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) நடைபெற்று வரும் நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் ஆர். விஜய் சரவணன் வெற்றி பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் விஜய் சரவணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சண். ராமநாதனை விட சுமார் 17,155 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றுள்ளார்.
தவெக வேட்பாளர் 17430 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
திமுக 69,169
பாஜக – 26,284
தவெக – 86,599
நாம் தமிழர் – 9,202
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, விஜய் சரவணன் 74,469 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். திமுக வேட்பாளர் 57,314 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அதிகாரப்பூர்வமாக வெற்றி அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் வெற்றியை நோக்கி மிக நெருக்கமாக முன்னேறி வருகிறார். தஞ்சாவூர் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் தவெக பல தொகுதிகளில் வலுவான முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதி முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
