தவெக அரசு மக்கள் விரும்பும் திசையில் செல்ல வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று (நவ.18) பேட்டியளித்த அவர், சமீபத்திய 6 மாத கால புதிய ஆட்சியை 50 ஆண்டுகால திமுக ஆட்சியோடு ஒப்பிட கூடாது எனக் குறிப்பிட்ட அவர், இந்த குறுகிய கால அனுபவத்தை பாடமாக கொண்டு சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
புதிய அரசை 50 ஆண்டுகால திமுகவோடு ஒப்பிடக்கூடாது: வீரபாண்டியன் பேட்டி
