Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெயிலின் தாக்கத்தை விட ஸ்டாலின் அலை தான் அதிகம்.. அமைச்சர் மகேஸ்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று திருச்சி மாநகரம் காட்டூர் பகுதிக்கு உட்பட்ட 38-வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காட்டூர் பிள்ளையார் கோவில் தெரு, பாப்பாக்குறிச்சி, நெய்குளம்,

பாரி நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து அவர் வாக்கு கேட்டார். அப்போது அவர் பேசியது நிறைவேற்றப்பட்ட மக்கள் நலப்பணிகள்

கடந்த 2024 முதல் 2026 வரையிலான திராவிட மாடல் ஆட்சியில், இந்த 38-வது வார்டில் மட்டும் சுமார் 25 கோடியே 55 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள், பள்ளிக் கட்டிடங்கள், சுற்றுச்சுவர் மற்றும் சிறு பாலங்கள் போன்ற எண்ணற்ற பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

அரசியல் அலை குறித்த கருத்து

“ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும்போது பொதுமக்களிடையே உற்சாகம் பெருகி வருவதைக் காண்கிறேன். தற்போது நிலவும் வெயிலின் தாக்கத்தை விட, முதல்வர் ஸ்டாலினின் அலை தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைக் கண்டு உணர்கிறேன்.”

அமைச்சர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது:
திட்டங்கள்: மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்றவை உங்கள் வாக்கினால் கிடைத்த பலன்கள்.

புதிய வாக்குறுதிகள்: தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும், முதியோர் உதவித்தொகை 1,200 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

நம்பிக்கை: “சொல்வதைச் செய்வார், செய்வதைச் சொல்வார்” என்பதற்கு இணங்க, முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார்.
2016-ல் நான் யாரென்று தெரியாத போதே என்னை வெற்றி பெறச் செய்தவர்கள் நீங்கள். அதே ஆதரவுடன் இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் காட்டூர் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், 38-வது வார்டு செயலாளர் தமிழ்மணி மாமன்ற உறுப்பினர் தாஜுதீன், மாநகரத் துணைச் செயலாளர் பொன்செல்லையா, காட்டூர் இளைஞர் அணி அமைப்பாளர் தயாநிதி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!