Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யாரை வேண்டுமானாலும் நம்புங்க… அன்புமணியை நம்பாதீங்க…ராமதாஸ் பேரன்

பாமக ராமதாசின் குடும்பத்தை பிரித்தது அன்புமணியும், அவரது மனைவி செளமியா மற்றும் அன்புமணியின் பதவிவெறியும் பணத்தாசையும் தான் என பாமக ராமதாசின் பேரன் முகுந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். 


திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாசுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ராமதாசின் பேரன் முகுந்தன், “நான் பேட்டி கொடுத்ததும் இல்லை, பேசனதும் இல்லை. ஆனால் பிரச்சனை என்னால் ஆரம்பித்தது. எனக்கு எம்எல்ஏ சட்டமன்ற வேட்பாளருக்கான சீட் கொடுப்பதாக அன்புமணி தெரிவித்தார்கள். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எங்களுக்கு பதவி ஆசை இல்லை. நான் பதவியை ராஜினாமா செய்தபோது மருத்துவர் ராமதாஸ் கோபபட்டார். அய்யாவின் முகம் வேண்டும், பெயர் வேண்டும், ஆனால் அய்யா ராமதாஸ் வேண்டாம் என அன்புமணி கூருகிறார். ராமதாஸ் குடும்பத்தை ஜிகே மணி பிரித்துவிட்டதாக கூறுகிறார்கள். குடும்பத்தை பிரித்தது அன்புமணியும், அவரது மனைவி செளமியா அன்புமணி தான். அன்புமணியின் பதவிவெறியும் பணத்தாசையும் தான். இது தொடர்பாக பேச நான் தயாராக உள்ளேன். இது தொடர்பாக பேச சவால் விடுக்கிறேன், யாரை வேண்டுமானாலும் நம்புங்கள், ஆனால் அன்புமணியை நம்பாதீங்க, அரசியலில் எந்த தொகுதியாக இருந்தாலும் போட்டியிட முழு செலவையும் அன்புமணியை ஏற்பதாக கூறினார். 

மேலும் மைக்கில் எப்படி பேசனும் என்ற நாகரீகம் அன்புமணிக்கு தெரியாதா? ஆதாயத்திற்காக நாங்கள் ராமதாசிடம் இல்லை. உங்க அப்பா ராமதாசை வந்து பார்த்துக்கோங்க… ஒருத்தர் மேல எவ்வளவு பழி போடமுடியுமோ அந்த அளவிற்கு செய்கிறார்கள், குழந்தையை வைத்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார்கள். மக்கள் கிட்ட கை குழந்தையை எடுத்து செல்லும் அன்புமணியின் மகள்கள் ஏன்? தைலாபுரம் இல்லத்திற்கு வர முடியவில்லை. என்னை சமாதான படுத்துவதற்காக, அன்புமணியின் ஆதரவாளர் கணேஷ் குமார் என்னை தொடர்பு கொண்டு தேர்தலில் நிற்க வைப்பதாகவும், அதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் என்னிடம் உறுதியளித்தார். இந்த ஆதாரத்தை விரைவில் நான் வெளியிடுகிறேன்” என்றார்.

error: Content is protected !!