வேலூர் மாவட்டம் லத்தேரி காவல் நிலையம் அருகே ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான செம்பு மற்றும் இரும்புப் பொருட்கள் கடந்த ஜனவரி மாதம் திருடப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பிராங்கிளின் உள்ளிட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட பொருட்களை பழைய இரும்புக் கடைகளில் உருக்கி விற்பனை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ரூ.6.5 கோடி ரயில்வே பொருட்கள் திருட்டு – 5 பேர் கைது!
