Skip to content
Home » சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ…

சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ…

  • by Senthil

வடக்கு திரிபுரா மாவட்டத்தில்  உள்ள பாக்பாசா சட்டமன்றத் தொகுதியின்  பாஜக எம்.எல்.ஏ.வான ஜதாப் லால் நாத் முதல்முறையாக மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இடதுசாரி கோட்டையில் மார்க்சிஸட் வேட்பாளர் பிஜிதா நாத்தை தோற்கடித்தார்.

தற்போது வைரலாகியுள்ள வீடியோவின் படி,  சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே நாத் தனது மொபைல் போனில் சில ஆபாசமான விஷயங்களை  பார்த்துக் கொண்டிருந்தார். கீழே ஸ்க்ரோலிங் செய்துவிட்டு மீண்டும் சட்டசபை நடவடிக்கைகளுக்கு நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட

சபாநாயகர் பிஸ்வா பந்து சென் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறார். இந்த வீடியோவை படம் பிடித்தது யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் அந்த வீடியோ தற்போது நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

இதைத்தொடர்ந்து பாஜக எம்.எல்‘ஏவுக்கு விளக்கம் கேட்டு  சோகாஸ் நோட்டீஸ் அனுப்ப திரிபுரா அரசு  முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!