மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கார்த்திகை தீபம் நெருங்குவதால் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், தர்கா தரப்பு, ஆட்சியர், தமிழக அரசின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நாளை மதியம் மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது. இதனிடையே திருப்பரங்குன்றம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு.. நாளைக்கு ஒத்திவைப்பு
