Skip to content
Home » திருப்பூரில் தடை தாண்டும் ஓட்டம்… மாணவர்கள் அபாரம்….

திருப்பூரில் தடை தாண்டும் ஓட்டம்… மாணவர்கள் அபாரம்….

  • by Senthil

திருப்பூர் தெற்கு குறுமைய மாணவர்களுக்கான தடகளப்போட் டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். 100 மீட்டர் ஓட்டத்தில் 14 வயதிற்குட் பட்ட பிரிவில் வித்ய விகாசினி பள்ளி முதலிடமும், செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி 2 மற்றும் 3-ம் இடமும், 17 வயதிற்குட் பட்ட பிரிவில் விஜயாபுரம் அரசு பள்ளி முதலிடமும், ஆஸாத் மெட்ரிக்பள்ளி 2-ம் இடமும், வேலவன் மெட்ரிக் பள்ளி 3-ம் இடமும், 19 வயதிற்குட்பட்ட பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி முதலிடமும், விவேகானந்தா வித்யாலயா பள்ளி 2 மற் றும் 3-ம் இடமும் பெற்றன.

நீளம் தாண்டுதலில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் வித்ய விகா சினி பள்ளி முதலிடமும், பிரண்ட்லைன் அகாடமி பள்ளி 2-ம் இடமும், செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி 3-ம் இடமும், 17 வய திற்குட்பட்டோர் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி முதலி டமும், வித்ய விகாசினி பள்ளி 2-ம் இடமும், வேலவன் மெட் ரிக்பள்ளி 3-ம் இடமும், 19 வயதிற்குட்பட்ட பிரிவில் பிளாட் டோஸ் அகாடமி பள்ளி முதலிடமும், லிட்டில் பிளவர் பள்ளி 2-ம் இடமும், விவேகானந்தா வித்யாலயா பள்ளி 3-ம் இடமும் பெற்றன.

தடை தாண்டும் ஓட்டம் 14 வயதிற்குட்பட்ட 80 மீட்டர் தடை தாண்டுதலில் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி முதலிடமும், பிளாட்டோஸ் அகாடமி பள்ளி 2-ம் இடமும், விவேகானந்தா வித்யாலயா பள்ளி 3-ம் இடமும், 110 மீட்டர் தடை தாண்டுதலில் 17 வயதிற்குட்பட் டோர் பிரிவில் இடுவம்பாளையம் அரசு பள்ளி முதலிடமும்,

செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி 2-ம் இடமும், விஜயாபுரம் அரசு பள்ளி 3-ம் இடமும், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி முதலிடமும், கே. எஸ். சி. அரசு பள்ளி 2-ம் இடமும், விவேகானந்தா வித்யாலயா பள்ளி 3-ம் இடமும் பெற்றன.

உயரம் தாண்டுதலில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பிரண்ட் லைன் அகாடமி பள்ளி முதல் மற்றும் 2-ம் இடமும், வித்ய விகாசினி பள்ளி 3-ம் இடமும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி முதல் மற்றும் 3-ம் இடமும், வித்ய விகாசினி பள்ளி 2-ம் இடமும், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பிரண்ட்லைன் அகாடமி பள்ளி முதல் மற்றும் 2-ம் இடமும், விவேகானந்தா வித்யாலயா பள்ளி 3-ம் இடமும் பெற்றன.

இதுபோல் 300 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டுதல், மும்முறை தத்தி தாவுதல், கழியூன்றி தாண்டுதல், வட்டு மற் றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!