Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை பெருவிழா: கண்ணாடி பல்லாக்கில் ஏழூர் புறப்பட்டார் ஐயாறப்பர்

திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவிலில் சித்திரை சப்தஸ்தான திருவிழா 13 நாட்கள் ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த 21 ம் தேதி வேதங்கள் மேளதாளங்கள் நாதஸ்வர கச்சேரிகள் முழங்க வெகு விமர்சையாக கொடியேற்றுடன் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் ஐயாறப்பர் அம்பாள் ஒவ்வொரு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். முக்கிய நிகழ்வான ஐந்தாம் திருநாள் சுவாமி தன்னைத்தானே பூசித்தல் காதோலை சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏழாம் திருநாளில் பெருமாளுக்கு சங்கு சக்கரம் வழங்கும் அலங்காரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோ ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஒன்பதாவது நாளான திரு தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது இதில் ஐயாறப்பர் அம்பாள், முருகப்பெருமான், விநாயகர், சண்டிகேஸ்வரர், அறம்வளர்த்தநாயகி என பஞ்ச மூர்த்திகளும் திருத்தேரில் எழுந்தரருழி பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறைவனை வழிபட்டு சென்றார்கள்.

முக்கிய நிகழ்வான இன்று ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களுக்கு ஐயாறப்பர் அம்பாள் கண்ணாடி பல்லாக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகை திருமண கோலத்தில் வெற்றிவேர் பல்லாக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் அலங்கார தீபாரதனை பஞ்சமுக தீபாரதனை கோபுர தரிசனம் என பல நிகழ்வுகள் வேதங்கள் முழங்க மேலதாள இன்னிசை கச்சேரியுடன் ஆயிரக்கணக்கான மக்கள், பக்தர்களின் மத்தியிலேயே புறப்பட்டு சென்றார். சப்த்தஸ்தான முதல் தலமான திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பந்துருத்தி,திருநெய்தானம் வந்து நாளை திருவையாறு தேரடி திடலில் ஏழூர் கண்ணாடி பல்லாக்குகளும் ஒரே இடத்தில் சங்கமித்து பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கோயில் நிர்வாகத்தின் சார்பாக எதிர்பார்க்கப்படுகிறது. விழாவின் ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி கட்டளை தம்பிரான் ஸ்ரீமத் சொக்கலிங்கம் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகம் வெகு சிறப்பாக செய்து வருகின்றனர்.

error: Content is protected !!