Skip to content
Home » திருவாரூரில் நிற்கும் காருக்கு விருதுநகர் போலீசார் அபராதம் விதித்த கொடுமை

திருவாரூரில் நிற்கும் காருக்கு விருதுநகர் போலீசார் அபராதம் விதித்த கொடுமை

திருவாரூர் மாவட்டம், ஜாம்புவானோடை மேலக்காடு  என்ற பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(52) இவர் முன்னாள் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர்.  இவரது செல் (9443860222) நம்பருக்கு நேற்று மதியம் சுமார் 1.16மணிக்கு விருதுநகர் டிராபிக் போலீசிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. இதில் இவரது TN50யுஓ9777 கொண்ட கார் தற்சமயம் விருதுநகர் வந்ததாகவும் ஓட்டுனர் லைசன்ஸ் இல்லாமலும் மற்றும் பர்மிட் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலும் வந்ததாகவும் அதனால் அபராதம் ரூபாய் 500 விதித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் அதர்ச்சியடைந்த காங்கிரஸ் பிரமுகர் கந்தவேல் முத்துப்பேட்டை போலீசாரை தொடர்புக்கொண்டார் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். அங்குள்ள போலீசார் ஆலோசனையுடன் முத்துப்பேட்டையில் உள்ள ஈசேவை மையத்திலிருந்து விருதுநகர் எஸ்பிக்கு ஆன்லைனில் முத்துப்பேட்டையிலிருந்து தான் தனக்கு சொந்தமான காருடன் நின்று லொகேசன் புகைபடத்தை பதிவிட்டு புகார் செய்தார். அந்த புகார் மனுவில்:
மேற்கண்ட முகவரியில் வசிக்கும் நான் தற்போது இன்று (21.12.2023) எனது சொந்த ஊரில் உள்ளேன், எனக்கு சொந்தமான TN50யுஓ9777 எண் கொண்ட மாருதி  கார் எனது வசம் உள்ளது. இந்நிலையில் இன்று சரியாக பகல் 1.30மணியளவில் எனது செல் நம்பருக்கு ஒரு மெசேஜ் வந்தது அதில் நான் எனது  காா் விருதுநகர் வந்ததாகவும் ஓட்டுனர் லைசன்ஸ் இல்லாமலும் மற்றும் பர்மிட் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலும் வந்ததாகவும் அதனால் அபராதம் ரூபாய் 500 விதித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

உண்மைக்கு மாறாக குறியிடப்பட்டுள்ளது. நான் சொந்த ஊரில் எனது காருடன் இருக்கும் நிலையில் இதனை கண்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். மேலும் பல சந்தேகங்களை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. அதனால் இதனை விசாரித்து இந்த தவறான அபாரத நடவடிக்கையயை நீக்கம் செய்ய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டு அதனுடன் நேற்று சொந்த ஊரில் அவரது வாகனத்துடன் இருக்கும் லொகேசன் புகைபடமும் அவரது

தொலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியையும் இணைத்து புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர் கந்தவேல் கூறுகையில:; இதுபோன்ற சம்பவங்கள் பலருக்கு நடந்துள்ளது கேள்வி பட்டுள்ளேன் இன்று எனக்கே இப்படி நடந்துள்ளது அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதன் மூலம் தவறுகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது உலகில் தமிழக போலீசார் தான் சிறந்தவர்கள் என பெயர் உள்ளது இதுபோன்ற தவறான நடவடிக்கை பதிவு செய்யும் சில போலீசாரால் நேர்மையான போலீசாருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது இதனை விசாரணை செய்து விருதுநகர் எஸ்பி  உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!