Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவையாறு அருகே லாரி டிரைவரை வெட்டி கொன்ற வழக்கில் 3 பேர் கைது

திருவையாறு அருகே லாரி டிரைவரை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

திருவையாறு அருகே திருப்பூந்துருத்தி யில் கொல்லைபுறம் வழியாக வீட்டில் நுழைந்து லாரி டிரைவரை வெட்டி கொலை செய்த வழக்கில் மூன்று பேர் கைது மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவையாறு அருகே மேல திருப்பூந்துருத்தி சிவன் கோவில் தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம் மகன் லாரி டிரைவர் இளங்குமரன் (41) கடந்த 15ம் தேதி வீட்டில் மதியம் தூங்கி கொண்டிருந்த போது கொல்லைபுறம் வழியாக வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து இளங்குமரனை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை செய்து விட்டு தப்பியோடியவர்கள் நடுப்படுகை சத்திரத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பார்த்திபன் எஸ் ஐ முகமது நிவாஸ் மற்றும் போலீசார் நடுப்படுகை சத்திரத்தில் பதுங்கியிருந்த மேல திருப்பூந்துருத்தி ஹாஜா நஜிமுதீன் மகன் சதாம் உசேன் (34) கண்டியூர் ராஜேந்திரன் மகன் இளையராஜா (38) மேல திருப்பூந்துருத்தி இரணியன் மகன் சுப்பிரமணியன் (34) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேலதிருப்பூந்துருத்தி ராஜேந்திரன் மகன் ராஜ்கண்ணுவுக்கும் (40) லாரி டிரைவர் இளங்குமரனுக்கும் இடம் சம்பந்தமாக சண்டை ஏற்பட்டு நான்கு ஆண்டுகளாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் இந்த முன்விரோதம் காரணமாக ராஜ்கண்ணு லாரி டிரைவர் இளங்குமரனை கொலை செய்ய தூண்டியதாக தெரிவித்தனர். இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து திருவையாறு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர் . விசாரணை மேற்கொண்ட குற்றவியல் நீதிபதி ஆக்னஸ் ஜெபகிருபா மூவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து மூவரையும் சிறையிலடைத்தனர்.
மேலும் கொலை செய்ய தூண்டிய முக்கிய குற்றவாளியான ராஜ்கண்ணுவை போலீசார் தேடிவருகின்றனர்.

error: Content is protected !!