Skip to content
Home » ஈரோட்டு பாதையில் தொடர் பயணம்…. திக வீரமணிக்கு பிரச்சார வேன் வழங்கல்…

ஈரோட்டு பாதையில் தொடர் பயணம்…. திக வீரமணிக்கு பிரச்சார வேன் வழங்கல்…

  • by Senthil

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு “ஈரோட்டு பாதையில் தொடர் பயணம்” எனும் நிகழ்வின் மூலம் பிரசார ஊர்தி வழங்கிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்-அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

ஈரோட்டு பாதையில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் கி.வீரமணியின் சமத்துவம், சமூகநீதி, மாநில உரிமைகளுக்கான போராளியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். ஆசிரியர் அவர்களை திராவிடத்தின் தளபதியாக அறிமுகம் செய்தவர் ஒரு ஆசிரியர் என்பதில் நான் பெருமையடைகிறேன்.

சாரங்கபாணி எனும் இயற்பெயர் கொண்ட சிறுவனின் பெயரை ‘வீரமணி’ என மாற்றியவர் அவரின் பள்ளி ஆசிரியர். அதே ஆசிரியரின் வழிகாட்டுதலின் படிதான் முதன்முதலாக மேடையில் பேசினார் சிறுவன் வீரமணி அவர்கள்! இன்று நமக்கெல்லாம் திராவிடத்தைக் கற்றுத்தரும் ஆசிரியராக திகழ்கிறார் என்று இவ்வாறு அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

94 வயது வரை தந்தை பெரியார் அவர்கள் பயணம் செய்த தூரம் 13 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர். சமத்துவத்திற்காக, சமூகநீதிக்காக, மனித குலத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் பயணம் செய்தார் தந்தை பெரியார் அவர்கள். அவரின் வழியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் அவர்களின் திராவிட பாடங்களை மாணவராக இருந்து கற்று கொண்டிருக்கிறோம்.   வழங்கப்பட்டுள்ள இந்த வாகனம் என்பது ஆரியம், இந்துத்துவம், சாதிய வேறுபாடு, மாநில உரிமை மறுப்பு, ஜனநாயக எதிரிகள் போன்ற தடைகளை எல்லாம் வெற்றிகரமாக கடந்து திராவிடம் எனும் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டே இருக்கப் போகிறது. இந்த நிகழ்வில் திராவிடர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!