Skip to content
Home » இன்றைய ராசிபலன்…(19.04.2024)

இன்றைய ராசிபலன்…(19.04.2024)

இன்றைய ராசிபலன்…(19.04.2024)

மேஷம்…. 

மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். வேலைகள் அதிகமாக காணப்படும். அதனால் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க சிரமப்படுவீர்கள். உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 

ரிஷபம்..

 ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் வெற்றி பெற பொறுமையாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். உறுதி மற்றும் தைரியம் மூலம் உங்கள் பணிகளை சரியாக செய்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை நன்கு புரிந்து கொண்டு செயல்படுங்கள். தேவையில்லாத செலவுகள் காணப்படும். தோலில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

மிதுனம்..

மிதுனம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உங்கள் பணிகளில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். நாளை பணவரவு அதிகமாக காணப்படும். அதை சரியான முறையில் சேமிப்பீர்கள். அமைதியை கடைபிடித்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

கடகம்…

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு  நாளைய நாள் அதிக முயற்சி எடுக்கும் நாளாக இருக்கும். ஒரு முடிவு எடுப்பதற்கு முன் ஒரு முறைக்கு பல முறை யோசிப்பது நல்லது. உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்வதன் மூலம் நற்பெயரை பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை மகிழ்விக்க, அவரை அனுசரித்து செல்லுங்கள். நாளை பணவரவு குறைந்து காணப்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். குளிர்ச்சியான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். 

சிம்மம்…

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் நாளைய நாளை சிறப்பானதாக மாற்றி கொள்ளலாம். பணிசுமை அதிகமாக காணப்படும். திட்டமிட்டு பணியாற்றினால் தவறுகள் ஏற்படாமல் தடுக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து பேசுவது நல்லது. வரவு செலவும் ஓன்று சேர்ந்து வரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 

கன்னி 


கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் பொறுமையாகவும் தைரியத்துடனும் செயல்பட வேண்டிய நாள். உங்கள் பணிகளில் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில வாக்குவாதங்கள் காணப்படும். பணவரவு குறைந்து காணப்படும். அதனால் பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும். உணவு மற்றும் தண்ணீரை சரியான நேரத்தில் எடுத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. 

துலாம்..

துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் வெற்றிபெறும் நாளாக இருக்கும். உங்களிடம் உறுதியும் தைரியமும் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பேசி மகிழ்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

விருச்சிகம்…

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள். அதற்காக மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நட்புடன் பழகுவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். அதனால் உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

தனுசு…

தனுசு ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். அதிக பணிகள் காணப்படும். எனவே தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படும். பண வரவை விட செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

மகரம்…

மகரம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் நேர்மறை எண்ணம் கொண்டு செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் இலக்கில் கவனம் செலுத்துவது நல்லது. நாளை பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் அதை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வது நல்லது. செலவுகள் அதிகமாக காணப்படும். தலைவலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. 

கும்பம் …

கும்ப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்கள் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மறக்கமுடியாத தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

மீனம்….

மீன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். உங்கள் தைரியம் மற்றும் முயற்சியினால் வெற்றி காண்பீர்கள். உங்கள் பணிகளை சிறப்பாக முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!