Skip to content
Home » போக்குவரத்து துறையில் காலியான இடங்களை நிரப்பக்கோரி நாளை விடுப்பு போராட்டம்..

போக்குவரத்து துறையில் காலியான இடங்களை நிரப்பக்கோரி நாளை விடுப்பு போராட்டம்..

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர், கு.பாலசுப்பிரமணியன் ஜெயங்கொண்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்‌. அப்போது செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து துறையில் 3 ஆயிரம் பணியிடங்களில், காலியாக உள்ள 1300-க்கும் மேற்ப்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இடம் மாறுதல், பதவி உயர்வு தொடர்ந்து அளிக்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் ஒட்டுமொத்தமுள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்களில் 29 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களால் பொது மக்களுடைய பணிகள் தாமதம் ஆகின்றன. எனவே உடனடியாக அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய நேர்முக உதவியாளர்களுக்கு பொறுப்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பதவி உயர்வு வழங்கி பிரச்சினைகளை தீர்க்க முன் வரவேண்டும், மேலும் தொழில்நுட்பம்,மென்பொருள் சாப்ட்வேர் டெக்னாலஜி இவற்றை அதில் உள்ள குறைபாடுகளை உடனடியாக போக்கி மக்களுக்கு விரைவு சேவையை உறுதிப்படுத்த வேண்டும், இதுபோன்ற ஆரம்ப கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு, மூன்று போராட்டங்கள் நடத்திய பிறகும் நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே தமிழக முழுதும் உள்ள அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களிலும் மற்றும் பணியாற்றும் அமைச்சு பணியாளர்கள் நாளைய தினம் 15.3. 2024 அன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் ஒட்டுமொத்த சிறு விடுப்பு போராட்டம் எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள். என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த விஷயத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு போக்குவரத்து ஆணையர் அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள அந்த கோப்புகளில் கையெழுத்திட்டு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!