Skip to content
Home » இல்லத்தரசிகளை கண்ணீரில் ஆழ்த்தி……பலரை கோடீஸ்வரர்களாக்கிய தக்காளி….

இல்லத்தரசிகளை கண்ணீரில் ஆழ்த்தி……பலரை கோடீஸ்வரர்களாக்கிய தக்காளி….

  • by Senthil

கலரிலும், தோற்றத்திலும் தக்காளி ஆப்பிள் போல இருப்பதாலும்,  விலை மலிவாக இருந்ததாலும் இதை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைப்பார்கள். ஆனால் இன்று தக்காளி  பணக்காரர்களின் ஆப்பிள் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டது.  சில்லறையில் கிலோ ரூ.200 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகிறது.  விலை குறைவதற்கான வாய்ப்பும் தென்படவில்லை.  விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

2 வாரங்களுக்கு முன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ஓரளவு விலை குறைந்தது. கடந்த 24-ந்தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

அதன் பின்னர், தக்காளி விலை மீண்டும் உயர தொடங்கியது. கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு இன்று தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி ரூ.20 விலை உயர்ந்து ரூ. 180க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதே நேரத்தில் சில்லறை  விலையில் ஒரு கிலோ தக்காளி 200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திடீர் விலை உயர்வு காரணமாக தக்காளி ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் பலரை லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாற்றி உள்ளது.  இனி தக்காளியை மறந்து விட வேண்டியது தான் என்ற நிலைக்கு தக்காளி உயர்ந்து விட்டது.  இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்து உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!