சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் சாலையோர தள்ளுவண்டி கடை வியாபாரிகளிடம் ரூ.2,500 அபராதம் செலுத்துமாறு கூறி சிலர் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அபராதம் செலுத்த மறுத்ததால் தள்ளுவண்டி கடைகளைச் சூறையாடியதாகவும் கூறப்படுகிறது. வந்தவர்கள் உண்மையான அதிகாரிகள் அல்ல என்றும் வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் என கூறி ரூ.2,500 அபராதம்.. வியாபாரிகள் சாலை மறியல்
