தஞ்சாவூர் மாநகரில் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து சிக்னல்கள் இன்று இரவு முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயங்கி வந்தன. ஆனால், முறையான பராமரிப்பின்மை காரணமாக சிக்னல்கள்

செயலிழந்ததால், போக்குவரத்து காவலர்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டு வந்தது.
போக்குவரத்து ஒழுங்கு பிரிவிலும் போதுமான அளவுக்கு காவலர்கள் இல்லாததால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதிலும் மிகுந்த சிரமம் நிலவி வந்தது. இதனால், மாநகரின் முக்கியமான இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.
இதை தவிர்ப்பதற்காக மாநகரில் 15 க்கும் மேற்பட்ட பல்வேறு பகுதிகள மீண்டும் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராணி பாரடைஸ் சந்திப்பிலுள்ள சிக்னலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு இயக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அப்போது, நகர காவல் துணை

கண்காணிப்பாளர் டி.எஸ். ஆதித்யன், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இரண்டாம் கட்டமாக மேலும் பல இடங்களில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு சிக்னல்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன.
மேலும் பல்வேறு இடங்களில் ஒளி சிமிட்டும் சாதனங்கள் (பிளிங்கர்) அமைக்கப்பட்டுள்ளன என காவல் துறையினர் தெரிவித்தனர்.
