Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்து.. பரபரப்பு

விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்துகுள்ளானது. தடம் புரண்ட ரயில் என்ஜினை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

என்ஜின் மட்டும் தடம் புரண்டதால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்ததும் விழுப்புரத்தில் இருந்து ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்துள்ளனர். ராட்சத கிரேன் மற்றும் ஜாக்கிகள் மூலம் தடம் புரண்ட என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!