Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் மதுஅருந்தி 2 பேர் பலி விவகாரம்… 4 பேர் சஸ்பெண்ட் ….

தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மீன்மார்க்கெட் எதிரே அரசு டாஸ்மாக்கடையும், அதன் அருகே மதுபானக்கூடமும் செயல்பட்டு வந்தது. இந்த மதுபான பாரில் நேற்று முன்தினம் சயனைடு கலந்த மது குடித்த குப்புசாமி, குட்டிவிவேக் ஆகிய 2 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், தாசில்தார் தங்க.பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மதுபான பாரில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள் எந்த கடையில் இருந்து சப்ளை செய்யப்பட்டது என, டாஸ்மாக்கடையில் உள்ள இருப்பை ஆய்வு செய்தனர்.

அப்போது பார் அருகே இருந்த டாஸ்மாக் கடையில் இருந்து தான் பாருக்கு மதுசப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து டாஸ்மாக்கடைக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மதுபானத்தை, மொத்தமாக பாருக்கு சப்ளை செய்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முருகானந்தம், விற்பனையாளர்கள் சத்தியசீலன், திருநாவுக்கரசு, பாலு ஆகிய 4 பேரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!