திருச்சி நகரத்தையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி பாலம் பழுதடைந்ததால் ராமரிப்பு பணிகளுக்காக ரூபாய் 6.87 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த மாதம் பாலம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் டூவீலர் முதல் கனரக வாகனங்கள் வரை சென்னை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தியே நகருக்குள் நுழைய வேண்டிய சூழலுக்கு கட்டாயம் ஏ ற்பட்டதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். 
