Skip to content
Home » திருச்சியில் விபத்தில் உயிரிழந்த மாணவி…. இழப்பீடு கேட்டு சிபிஐ முற்றுகை போராட்டம்..

திருச்சியில் விபத்தில் உயிரிழந்த மாணவி…. இழப்பீடு கேட்டு சிபிஐ முற்றுகை போராட்டம்..

  • by Senthil

திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகன் விஜயகுமார் மற்றும் மகள் ஜெகஜோதி. ஜெகஜோதி மேலபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறரர். இந்நிலையில் அவரது சகோதரர் விஜயகுமார் ஜெகஜோதி இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தனர் அப்பொழுது சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வந்த போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி பள்ளி மாணவி ஜெகஜோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அண்ணன் சிவக்குமார் படுக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பெற்றோர்கள் விபத்தில் உயிரிழந்த மாணவிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இதனை கண்டித்து இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, சி.ஐ.டி.யு சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லெனின் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து போராட்டம் நடத்தி வரும் பெற்றோர், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சிஐடியு சங்கத்தினருடன், திருச்சி கோட்டாட்சியர் பார்த்திபன், திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, மாநகராட்சி ஸ்ரீரங்கம்

மண்டல உதவியாளர் வைத்தியநாதன், ஸ்ரீரங்கம் காவல்துறை உதவியாளர் நிவேதா லட்சுமி உள்ளிட்ட பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக, 15நாட்களுக்குள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து சாலை சீரமைத்து தரப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து உயிரிழந்த பள்ளி மாணவி குடும்பத்திற்கு ரூபாய் 4லட்சம் நிவாரணம் வழங்குவது, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது என தெரிவிக்கப்பட்டது. மேலும் உடனடியாக அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பஸ் நிறுத்தத்தை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

தற்பொழுது வழங்கப்பட்ட கோரிக்கைகளை தவிர மற்ற கோரிக்கைகள் அனைத்தும் பின்னர் பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!