திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக எழுதிக் கொடுத்தனர். இந்நிலையில் நாம் தமிழர் ஆட்டோ தொழிலாளர் நல சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்ராஜா முகமது கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது…. மீட்டர் ஆட்டோ என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டுஆட்டோவில் செல்லும் பயணிகளிடம் அதிக அளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அரசு நிர்ணயத்த தொகையை ஆட்டோ டிரைவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர். மனு கொடுக்கும் பொழுது ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் உடன் இருந்தனர்.