60 நாட்களுக்கு பின்.. திருச்சியில் இருந்து பயணிகளுடன் விமானம் பறந்தது

158
Spread the love

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து கடந்த 60 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மே 25 (இன்று) முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, திருச்சியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இன்று முதல் விமான சேவை இயக்கப்பட உள்ளதாக இன்டிகோ நிறுவனம் அறிவித்தது. பயணிகளும் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தனர். இந்த சூழலில் திருச்சியிலிருந்து காலை 10.45, இரவு 9.20 மணிக்கு சென்னை புறப்பட வேண்டிய 2 விமான சேவைகளும் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன.  

இதனால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இதற்கிடையே பெங்களூருக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்து இண்டிகோ விமானம் இரவு 9.05 மணிக்கு 71 பயணிகளுடன் திருச்சி வந்தது. பின்னர் 60 பயணிகளுடன் இங்கிருந்து வேண்டும் பெங்களூர் புறப்பட்டு சென்றது.

LEAVE A REPLY