திருச்சி, ஜமால் முகமது கல்லூரி மாநில அளவிலான மாணவியர்களுக்கான கல்லூரிகளுக்கு இடையிலான மதர் தெரஸா கோப்பைக்கான வாலிபால் போட்டியை லீக் மற்றும் நாக் அவுட் முறையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருச்சி ஐமால் முகமது, பிஷப் ஹீபர், சீதாலட்சுமி இராமசாமி, பாரதிதாசன் பல்கலைக்கழக துறைகள் அணி,
மதுரை யாதவர், திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா, சேலம்,ஸ்ரீ சக்திகைலாஸ் மகளிர் கல்லூரி, கரூர், அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் ஆகிய 8 கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள், மற்றும் பரிசுத்தொகை முறையே ரூ. 10,000/-, ரூ. 7,000/-, ரூ. 5,000/- மற்றும் ரூ. 3,000/- வழங்கபடவுள்ளன. கல்லூரி பொருளாளர் எம்.ஜெ. ஜமால் முகமது, துணை செயலர் கே. அப்துஸ் சமது, முதல்வர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைக்கின்றனர். உடற்கல்வி இயக்குனர் பி. எஸ். ஷா இன் ஷா போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார்.