Skip to content
Home » குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்…

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் …. அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்…

திருச்சி மாவட்ட மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் 2023 ,100 சதவிகித மானியத்தில் உரங்களை தமிழ்நாடு பொதுப்பணி துறை அமைச்சர் ஏவ.வேலு, நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தனர். இதில் 45 கிலோ, 50 கிலோ, 25 கிலோ, ஆகிய அளவிலான மூட்டைகள் அடங்கிய தொகுப்பு வழங்கபட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஏவ. வேலு….

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் ஒதுக்கி முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. விவசாயிகளின் நலனைக் காக்க தமிழ்நாடு முதலமைச்சர் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாட்டின்

முதுகெலும்பு விவசாயம் என அடிக்கடி முதல்வர் கூறுவார். இந்த குறுவை சாகுபடியை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி அமோக விளைச்சலை விளைவிக்குமாறு வாழ்த்துகிறேன் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் நேரு..

சரியான பருவ மழை இருக்குமானால் புன்செய் சாகுபடி தான் விவசாயிகளுக்கு சிறந்தது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை முழுவதுமாக நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் வாங்க வேண்டும் என முதலமைச்சர் கூறி உள்ளார். குறுவை சாகுபடிக்கு அரசாங்கம் பங்கு பெறுகிறது. விளைவிக்கின்ற நெல்லை முழுவதுமாக கொள்முதல் செய்து கொள்ளும் என்றார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேச்சு..

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை குருவை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்ற உரிய நோக்கில் ரூபாய் 75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தினை  முதலமைச்சர் அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 2466 மதிப்பிலான 45 கிலோ யூரியா ,50 கிலோ DAP , 25 கிலோ பொட்டாஸ் ஆகிய முழு மானியத்தை விவசாயிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது.

குறிப்பாக லால்குடி, அந்தநல்லூர், திருவெறும்பூர், மன்னச்சநல்லூர், புள்ளம்பாடி முசிறி ஆகிய பகுதிகளில் 6500 ஏக்கர் பயிர்களுக்கான உரங்கள் 1.60 கோடி மாநிலத்தில் வழங்கப்பட உள்ளது. இதனை விவசாயிகள் பெற்று பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!