Skip to content
Home » திருச்சி அருகே ரூ.7 லட்சம் ரூபாய்க்கு 10 வட்டி கேட்டு மிரட்டி தாக்குதல்….. புகார்

திருச்சி அருகே ரூ.7 லட்சம் ரூபாய்க்கு 10 வட்டி கேட்டு மிரட்டி தாக்குதல்….. புகார்

திருச்சி மாவட்டம், லால்குடி, மணக்கால் ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் சந்திரா, இவருக்கு திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் திருமணத்திற்காக 2023 பிப்ரவரி 3ஆம் தேதி சமயபுரத்தினை சேர்ந்த மாசிலாமணி என்பவரிடம் 5 வட்டிக்கு 7 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளனர் அதற்காக மாதம் 35 ஆயிரம் ரூபாய் வட்டியாக கட்டி உள்ளனர். இந்த கடனுக்காக வீட்டின் பத்திரம் மற்றும் உயில் பத்திரம், ஆகியவை வாங்கிக் கொண்டனர். மேலும் நிரப்பப்படாத பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளனர். இந்நிலையில் பணத்தை திருப்பி கொடுப்பதற்காக மாசிலாமணி வீட்டிற்கு 29.04.2024 நேற்று இரவு 9 மணிக்கு சந்திரா அவரது மகன் கார்த்திக் அவரது மகள் கவிதா, மற்றும் பேத்தி,பேரன் ஆகியோர் சென்று உள்ளனர். ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட மாசிலாமணி 5 லட்சம் ரூபாய் மேலும் வேண்டுமென கூறியுள்ளார். பத்து வட்டி என்பதால் கூடுதலாக 5 லட்சம் ஆகிவிட்டது என கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாசிலாமணி மற்றும் அவரது மனைவி சித்ரா அவரது மகள் கீர்த்தனா மற்றும் மாசிலாமணியின் மைத்துனர்கள் பாலாஜி மற்றும் தண்டபாணி ஆகியோர் கதவை இழுத்து பூட்டி சந்திரா மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோரை இரும்பு ராடால் பலமாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது மகள் மற்றும் குழந்தைகளை செருப்பு காலால் எட்டி உதைத்து உள்ளனர்.

சந்திராவை பலமாக இரும்புராடால் தலையில் தாக்கியதில் மண்டை உடைந்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த அனைத்து செல்போன்களையும் பிடுங்கி உடைத்துள்ளனர். தொடர்ந்து கார்த்தி என்பவருக்கும் இரும்புராடால் தாக்கியதில் உடலில் காயம் ஏற்பட்டு இரத்த கரை படிந்த சட்டையுடன் தனது தாய் சந்திராவை மீட்டு குழந்தைகளுடன் சென்று சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து மாசிலாமணி உறவினர்கள் சமயபுரம் காவல் நிலையத்தில் வந்து அவர்களை தாக்கி மிரட்டி உள்ளனர். பலத்த காயம் அடைந்த சந்திரா மற்றும் கார்த்தி, திருச்சி அரசு மருத்துவமனை வந்துள்ளனர். அங்கு வந்த மாசிலாமணி மற்றும் தண்டபாணி ஆகியோர் அரசு மருத்துவமனையை விட்டு வெளியேறி விடு இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அங்கிருந்து தப்பித்து வந்த சந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தங்களை கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தங்களிடம் அபகரித்த செல்போன்களை மீட்டு தர வேண்டும் என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!