Skip to content
Home » திருவெறும்பூர் அருகே புதிய சுங்கசாவடி…விரைவில் வசூல்…வாகன ஓட்டிகள் அதிருப்தி…

திருவெறும்பூர் அருகே புதிய சுங்கசாவடி…விரைவில் வசூல்…வாகன ஓட்டிகள் அதிருப்தி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் செல்லும் அறைவட்ட சாலையில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் விரைவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

திருச்சி மாவட்டத்திற்கு வந்து செல்லும் சரக்கு மற்றும் சுற்றுலா வாகனங்களினால் வாகன நெரிசல் மற்றும் சாலை விபத்துக்கள் அடிக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது இதனை தவிர்க்கும் பொருட்டும் திருச்சி மாநகருக்குள் தேவையில்லாமல் வாகனங்கள் வருவதை தவிற்ப்பதற்காக திருவெறும்பூர் அருகே துவாக்குடி திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மாத்தூர் அருகே புதுக்கோட்டை தேசிய சாலை, பஞ்சப்பூர்

அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை, கேர் இன்ஜினியரிங் கல்லூரி அருகே திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜீயபுரம் பகுதியில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் ஒரு அரை வட்ட சாலை அமைக்க அமைக்கப்பட்டுள்ளது.

துவாக்குடி சுங்க சாவடியை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கவரி கார், ஜீப் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒருமுறை பயணத்திற்கு ரூ. 35 ம், 24 மணி நேரத்திற்குள் சென்றுவர ரூ. 55 ம், இலகுரக வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கும் மினிபஸ்களுக்கு ஒருமுறை ரூ. 55 ம், சென்றுவர ரூ. 85 ம், பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒருமுறை ரூ. 120 ம், சென்றுவர ரூ. 180 ம்,  ஒரு மாதத்திற்கு 50 நடை மட்டும் 3970 ஆக்ஸல் வாகனங்களுக்கு ஒருமுறை ரூ. 130 ம், சென்றுவர ரூ. 195 ம், ஒரு மாதத்திற்கு 50 நடை மட்டும் 4330 அக்ஸல் வாகனங்களுக்கு ஒருமுறை ரூ. 185 ம்,  சென்றுவரவும் ரூ. 280 ம்,  6 மற்றும் அதற்கு மேற்பட்ட அக்ஸல் வாகனங்களுக்கு ஒருமுறை ரூ. 225 ம், சென்றுவர ரூ. 340 ம் வசூவிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது மேலும் விரைவில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரி அசாருதீன் அவர்களிடம் கேட்ட பொழுது நெடுஞ்சாலை துறை சார்பாக வசூல் தேதி குறிப்பிட்டு எங்களுக்கு கடிதம் அனுப்புவார்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதியில் இருந்து தான் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். ஏற்கனவே திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் டோல் பிளாசா இயங்கி வருகிறது இந்த நிலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே அரை வட்டச் சாலையில் மற்றொரு டோல் பிளாசா இருப்பதால் இரண்டு டோல்களுக்கும் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!