பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் ஜூன் 27, 29 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் கரூர் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட தேதிகளில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து கரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
