விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநில முதல் மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் சென்று கொண்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் தலைமையில் 5 பேர் ஒரு இனோவா காரில் மாநாட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேக் உசேன் பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தது காரின் முன்பக்க டயர் திடீரென்று சாலை நடுவே இருந்த சென்டர் மிடியனில் மோதியது இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழத்ந கார சாலையில் தாறுமாறாக ஓடிய கார் சாலையின் இடது புறத்தில் இருந்த மரத்தடியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுனர் உட்பட ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். 
