கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர்கள் சுஜித் குமார் மற்றும் பிரதோஷ் ஆகிய இருவரும் இன்று காலை கண்ணம்பாளையம் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 12-ம் வகுப்பு தேர்வு நடைபெறுவதால், 6-ம் வகுப்பு தேர்வு மதியத்திற்கு மேல் நடைபெறும் சூழலில், காலையில் 2 மாணவர்களும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
சிறுவர்களின் உடல்கள் குளத்தில் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து, உயிரிழந்த சுஜித் குமார் மற்றும் பிரதோஷ் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

