Skip to content
Home » தமிழ்நாடு பெயரை…. தமிழ்நாய்டு என மாற்றி ஒன்றிய அரசு வம்பு

தமிழ்நாடு பெயரை…. தமிழ்நாய்டு என மாற்றி ஒன்றிய அரசு வம்பு

  • by Senthil

தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என கவர்னர் ரவி கூறி வந்த நிலையில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த  எதிர்ப்பையும் வாங்கி கட்டிக்கொண்ட ரவி இப்போது, அவரே தமிழ்நாடு என கூறி வருகிறார். இந்த நிலையில் மத்திய அரசும் தன் பங்குக்கு தமிழ் நாடு என்பதை பங்கம் செய்யும் வகையில் தமிழ் நாய்டு என  தனது இணைய தளத்தில் பதிவிட்டுள்ளது. இதுவும் இப்போது கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தில்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் http://mygov.in தமிழ்நாட்டின் பெயர் TamilNaidu என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும். தமிழ்நாடு பெயர் அண்மைக்காலமாக தேவையின்றி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

http://mygov.in தளத்தில் நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!