Skip to content
Home » உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கோலாகலம்……

உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கோலாகலம்……

  • by Senthil

திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுக ளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு பக்தர் களை வெக்காளியம்மன் காப்பதாக நம்பப்படுகிறது. மேலும் கல்வி, செல்வம்,வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன் னையாகவும் வெக்காளி யம்மன் போற்றப்பட்டு வருகிறார்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் சிறப்பு பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி கோயில் அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 6 மணிக்கு கோயில் சார்பில் அறநிலையத்துறை உதவி ஆணையர் சரவணன், தக்கார் லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை. அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உறையூர் மட்டு மின்றி மாநகரில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் தாம்பூல தட்டிலும், கூடை, கூடையாகவும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழி பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!