Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்: உலகப் போரைத் தடுக்குமா பாகிஸ்தானின் ரகசிய மத்தியஸ்தம்?

நீண்ட நாட்களாக நீடித்து வரும் அமெரிக்கா – ஈரான் இடையேயான போர்ச் சூழலில், தற்போது ஒரு முக்கிய திருப்பமாக அமைதி ஒப்பந்தத்திற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இரு நாடுகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரைவு உரைகளையும் (Draft Texts) செய்திகளையும் தீவிரமாகப் பரிமாறி வருகின்றன.

டெஹ்ரானில் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் தூதுவர்: கசிந்த ரகசியத் தகவல்கள்

இந்த இக்கட்டான சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் உண்டாக்கும் ‘மத்தியஸ்தராக’ (Mediator) பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி (Mohsin Naqvi) கடந்த மூன்று நாட்களாக ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் முகாமிட்டு, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் (Abbas Araghchi) தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் இருந்து வரும் முன்மொழிவுகளைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் பாலமாக பாகிஸ்தான் செயல்படுகிறது. பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டவுடன், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் டெஹ்ரான் விரைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் முக்கியப் புள்ளிகள் என்னென்ன?

இருப்பினும், முழுமையான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய நிபந்தனைகளில் இன்னும் இழுபறி நீடிக்கிறது:

போர் நிறுத்தம்: அனைத்து முனைகளிலும் ஒரே கட்டமாகப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் கோருகிறது. ஆனால், பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைப் பொறுத்து படிப்படியாகவே (Phased manner) போரை நிறுத்த முடியும் என அமெரிக்கா கூறுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz): உலக எரிசக்தி விநியோகத்தில் 30 சதவீதத்திற்கும் மேல் கடந்து செல்லும் இந்த எல்லையில் முழு இறையாண்மையையும் ஈரான் கோருகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

அணுசக்தி கட்டுப்பாடுகள்: டெஹ்ரானைத் தவிர ஈரானின் மற்ற அனைத்து அணுசக்தி நிலையங்களையும் மூட வேண்டும் என்றும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) வெளியேற்ற வேண்டும் என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.

ரான் போரால் தைவானுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்திய அமெரிக்கா!

இந்த போரின் தாக்கம் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஈரான் மீதான போருக்குத் தங்களுக்குப் போதிய ஆயுதங்களும் வெடிமருந்துகளும் தேவைப்படுவதால், தைவான் நாட்டிற்கு வழங்கவிருந்த $14 பில்லியன் (1400 கோடி டாலர்) மதிப்பிலான ஆயுத விற்பனையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க கடற்படைத் தலைவர் ஹங் காவ் (Hung Cao) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!