Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாஜ்பாய் நினைவுதினம்….. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 2018ம் வருடம் இதே நாளில் மறைந்தார். இன்று அவரது நினைவு தினம்  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டில்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற பாஜக தலைவர்களும் மரியாதை செலுத்தினர். மேலும் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யா சதைவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!