Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காந்தி மார்க்கெட்டில் வேன் திருட்டு- திருச்சி க்ரைம்.. பரபரப்பு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

காந்தி மார்க்கெட்டில் வேன் திருட்டு

திருச்சிஅந்த நல்லூர் கடியாக்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 45) இவர் கடந்த 17 ந்தேதி வேனில் வாழை இலைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட்க்கு வந்தார். பிறகு காந்தி மார்க்கெட்டிப் வாழை இலையை இறக்கிவிட்டு வண்டியை நிறுத்திவிட்டு காந்திமார்க்கெட் க்குள் சென்று விட்டு பிறகு மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த வேனை மர்மா சாமி திருடி சென்றது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் அசோக்குமார் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக்குமாரின் வேனை திருடிய மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

காய்கறி வியாபாரி மூச்சு திணறி உயிரழிப்பு

திருச்சி வண்ணாரப்பேட்டை புது தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (வயது 67 ) இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மேலும் இவர் குடிப்பழக்கம் உள்ளவர். நேற்று மாலை தென்னூர் மந்தை அருகில்
அந்தோணி ராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூச்சு திணறி இறந்த அந்தோணி ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வீட்டுக்குள் ரத்த காயங்களுடன் வாலிபர் மர்ம சாவு

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை மேல அர்ஜுனா தெருவை சேர்ந்தவர்
சுரேஷ்குமார் (வயது 42) தனது தாயுடன் வசித்து வரும் சுரேஷ்குமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ்குமார் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந் துள்ளார். இது குறித்து அவரை வீட்டிற்கு பார்க்க வந்த ஒரு ஆட்டோ டிரைவர்ஒருவர் சுரேஷ்குமார் தங்கைக்கு போன் செய்து தகவலை கூறியுள்ளார்.இது குறித்து தங்கை அனுசியா அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். தகவல் அறிந்து போலீசார் சம்ப இடத்துக்கு விரைந்து சென்று தலையில் ரத்த காயங்கள் இறந்து கிடந்த சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவ குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமார் இறந்தது எப்படி? தலையில் காயம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் ?கொலையா, தற்கொலையா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!