Skip to content
Home » சென்னை-கோவை வந்தேபாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது

சென்னை-கோவை வந்தேபாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது

  • by Senthil

சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை 8-ந் தேதி (நாளை) பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இரு மார்க்கமாகவும் இயக்கப்படுகிறது.

சென்னை – கோவை வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. 6 மணி நேர பயணத்திற்கு ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான ‘வந்தே பாரத் ரெயில் (எண்: 20644) கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.

வழியில், திருப்பூருக்கு காலை 6.35 மணிக்கு சென்றடைந்து, காலை 6.37 மணிக்கு புறப்படும் ரயில், ஈரோட்டுக்கு காலை 7.12 மணிக்கு சென்றடைந்து, காலை 7.15 மணிக்கு புறப்படும். சேலத்துக்கு காலை 7.58 மணிக்கு சென்றடைந்து, காலை 8 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல்-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 20643), மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும். வரும் வழியில், சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்தடைந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரயில், ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு வந்தடைந்து, மாலை 6.35 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு இரவு 7.13 மணிக்கு வந்தடைந்து, இரவு 7.15 மணிக்கு புறப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!