Skip to content
Home » ராகுல்காந்தியை எதிர்த்து டி.ராஜாவின் மனைவி ஆனி போட்டி…? …

ராகுல்காந்தியை எதிர்த்து டி.ராஜாவின் மனைவி ஆனி போட்டி…? …

  • by Senthil

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, கடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், ராகுல் காந்தி இந்த முறையும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, கேரளாவில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. 4 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சிபிஐ வெளியிட்டுள்ளது. இதில் ராகுல் காந்தி எம்.பியாக இருக்கும் வயநாடு தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி ராஜாவின் மனைவி ஆன்னி ராஜா போட்டியிடுவார் என இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. அதேபோல், திருவனந்தபுரம் தொகுதியில் பன்னியன் ரவீந்திரன் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!