Skip to content
Home » உயர் ரக மரங்களை இலவசமாக பெற்று நடவு செய்ய வேண்டும்…வேளாண் இயக்குநர்..

உயர் ரக மரங்களை இலவசமாக பெற்று நடவு செய்ய வேண்டும்…வேளாண் இயக்குநர்..

  • by Senthil

வேளாண்மை துணை இயக்குநர் சுஜாதா அறிக்கையில் கூறியதாவது…  தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் வனத்துறை ஆகியவை இணைந்து தமிழ்நாடு பசுமை இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலங்களில் பயன் தரும் உயர் ரக மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 400 மரக்கன்றுகள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்து, பராமரித்து வந்தால், அடுத்த மூன்று வருடங்களுக்கு கன்று ஒன்றிற்கு ரூபாய் 7 வீதம் பராமரிப்பு மானியமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு உயர் ரக மரக்கன்றுகளை வரப்பிலோ அல்லது மேட்டுப்பங்கான வயல்களிலோ சாகுபடி செய்து பராமரித்து வருவதன் மூலம் விவசாயிக்கு ஒரு நீண்டகால பலன் கிடைக்கிறது. மேலும் மரக்கன்றுகளை நடவு செய்துள்ள வயலின் மதிப்பும் அதிகரிக்கிறது. எனவே தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் உயர் ரக மரக்கன்றுகளை பெற்று நடவு செய்து பராமரித்திட விவசாயிகள் முன் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!