Skip to content
Home » வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலகமாகவும் விளங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தற்பொழுது இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக 110 ஆட்டோக்களுக்கு புதிதாக அனுமதி அளிக்க உள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேளாங்கண்ணி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தின் கூட்டமைப்பினர் இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் அளித்த மனுவில் ஏற்கனவே உள்ள ஆட்டோக்களால் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு உள்ள வேளாங்கண்ணியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், புதிதாக 110 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கினால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் எனவும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ள அவர்கள் புதிய ஆட்டோகோலுக்கு அனுமதி வழங்க கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!