Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சிவராத்திரி முன்னிட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதைத் தொடர்ந்து மலையின் அடிவாரப் பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகே வந்த ஒற்றை காட்டு யானையை அதனை அங்கு நின்று கொண்டு பக்தர்கள் பார்த்து உள்ளனர்.

அப்பொழுது திடீரென அந்த யானை பக்தர்கள் கூட்டத்தை நோக்கி பிளிறி கொண்டு ஓடி வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அங்கும் இங்கும் ஓடினர். இதனை அங்கு இருந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ காட்சிகளாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!