மே 4-ம் தேதிக்கு பிறகு விஜய்க்கு நிரந்தர ஓய்வு கிடைக்கும் என நடிகர் போஸ் வெங்கட் விமர்சித்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஸ்டாலின் உள்பட அனைத்துத் தலைவர்களும் வெயில், மழை பார்க்காமல் பரப்புரை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மக்கள் தலைவர்கள் என்றார். ஷூட்டிங்கில் 2 மணிநேரம் மட்டுமே நடித்துவிட்டு, கேரவனில் இருக்கும் விஜயால் வெயிலை தாங்க முடியாது என்றும் அவர் சாடினார்.
