தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வ ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். விஜயகாந்தின் உடலானது தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு தினசரி மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த
இந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் வருகிற 19ஆம் தேதி அஞ்சலி கூட்டம்



நடைபெறும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால், வாழும் போதே கடவுளாக வாழ்ந்தவர் விஜயகாந்த். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படும். விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் வருகிற 19ஆம் தேதி அஞ்சலி கூட்டம் நடைபெறும் என கூறினார்.

