Skip to content
Home » விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை…. மருத்துவ அறிக்கை…

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை…. மருத்துவ அறிக்கை…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்திற்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வௌியிட்டுள்ளது. விஜயகாந்த் நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் விஜயகாந்த உடல்நிலை சீராக இல்லாததால் நுரையீரல் சிகிச்சை தேவைப்படுகிறது. ஐசியூ சிகிச்சை பிரிவில் தான் இருந்து வருகிறார். விஜயகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!