Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விக்கிரவாண்டி….. 64 பேர் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும்  ஜூலை 10ம் தேதி நடக்கிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல்  கடந்த 14ம் தேதி தொடங்கியது. இன்று பிற்பகல் 3 மணியுடன்  மனு தாக்கல் நிறைவடைந்தது.  திமுக வேட்பாளர்  அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர்  அன்புமணி, நாதக வேட்பாளர் அபிநாயா ஆகியோர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் கடைசி நாளான இன்றும்  பலர் மனு செய்தனர்.   கள்ளக்குறிச்சி   அடுத்த கனியாமூர் பள்ளி்யில் மர்மமான முறையில் இறந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியும்  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கடைசி நேரமான 3 மணி வரை  மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த வேட்புமனுக்கள் 24ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 26ம் தேதி மாலை வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி்யிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!