கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும் கிராம கோவில் பூசாரிகளுக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மாத ஊக்கத்தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட அமைப்பாளர் கோபிநாத் தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பூசாரிகள் கலந்து கொண்டனர்.