Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மாத்திரை…. புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவடடம் வடவாளம் கிராமத்தில்  பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு கலெக்டர்  அருணா,  ஊட்டச்சத்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளையும்,  மாவட்ட தொழில் மையம் சார்பில் பயனாளிக்கு ஆட்டோக்களும்,  மாற்றுத் திறனாளிகள்  துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி  வீல்சேர்கள்,  ஆகியவற்றை கலெக்டர் அருணா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா,  எம்.எல்.ஏ முத்துராஜா,மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்  ஜெயலட்சுமி தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!