தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

