Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10ம் வகுப்பு தேர்ச்சி .. மாணவர்களுக்கு VSB வாழ்த்து

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X-தளத்தில் கூறியதாவது… நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.. கோவை மாவட்டத்தில், 509 பள்ளிகளில், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 18506 மாணவர்கள் மற்றும் 19338 மாணவியர்களில், 17760 மாணவர்களும், 18982 மாணவியர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.. 95.97 சதவீதம் மாணவர்களும், 98.16 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் வெற்றி விகிதம் 97.07% ஆகும். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும் நலத்திட்டங்கள் வாயிலாகவும் இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. மேலும் 251 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.. தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் சிறிதும் மனம் தளராமல் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!