Skip to content
Home » தண்ணீரின்றி நெற்பயிற்கள் கருகுவதால் விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை…..

தண்ணீரின்றி நெற்பயிற்கள் கருகுவதால் விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை…..

  • by Senthil

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12 தண்ணீர் திறந்து விட்ட போதிலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பெருமளவிலான விவசாயிகள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்துள்ள நிலையில் பாசன நீர் கிடைக்காமல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நாகை மாவட்டத்திற்கு சுற்று பயணமாக வந்த நிலையில் முதல்வர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மறு நடவுக்கும் ஏதாவது அறிவிப்பு வெளியிடுவார் என, நம்பிக்கையோடு காத்திருந்த விவசாயிகளுக்கு கிடைத்தது என்னவோ

ஏமாற்றம் தான்.குறிப்பாக நாகை மாவட்டத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்ட எந்த பகுதிகளையும் பார்வையிடவில்லை. நீர் கிடைக்காததால் பல்வேறு இடங்களிலுள்ள விளை நிலங்கள் கருகி வருகிறது.குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம், கீரங்குடி, வடமருதூர், தென்மருதூர் , ராமச்சந்திரபுரம், கீழக்கண்ணாப்பூர், செம்பேனேரி, என நாகப்பட்டினம் மாவட்டத்தில் 30000 ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ளது . பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் வறண்டு காணப்படுவதால் நீர் கிடைக்க இனியும் வழியில்லை என முடிவெடுத்த விவசாயிகள் விளை நிலங்களில் விவசாயிகள் கால்நடைகளை விட்டு மேய்க்க தொடங்கிவிட்டனர். மேலும் ஏக்கருக்கு சுமார் 25,000 வரை கடன் பெற்று சாகுபடி செய்யப்பட்ட நிலையில் உரிய தண்ணீர் கிடைக்காததால் கருகி வருகிறது.இந்நிலையில் இதுவரை எந்த அமைச்சர்களோ வேளாண்துறை அதிகாரிகளோ வருவாய் துறை அதிகாரிகளோ இதுவரை வந்து பார்த்து ஆறுதல் கூறவில்லை என வேதனை தெரிவித்த விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மறு விவசாயம் செய்யவும் சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சென்ற ஆட்சியில் வழங்கியது போல சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும் எனவும் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!