Skip to content
Home » இன்றைய ராசிபலன்கள்..

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம்-கடந்த காலத்தின் சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்-டும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்-ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக நியாயம் கேட்கப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப்பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

கடகம்-எதிர்காலம் பற்றிய வீண் டென்ஷன் வந்து செல்லும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகன பழுதாகும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணையான பேச்சால் சரி செய்யுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.

சிம்மம்-எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்‌ எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்பு கூடும் நாள்.

கன்னி-குடும்பத்தில் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உற்சாகமான நாள்.

துலாம்-கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த ணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

விருச்சிகம்-சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

தனுசு-

பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். தாயாரின் உடல் நலம் சீராகும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். ல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள்வெளிப்படும் நாள்.

மகரம்-எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள்கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். நன்மை கிட்டும் நாள்.

கும்பம்-உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.

மீனம்-திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அசதி சோர்வு வந்து விலகும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!